Tuesday, June 8, 2010

உலகக்கோப்பை கால்பந்து கண்ணோட்டம்

பத்தொன்பதாவது "பிபா உலக கோப்பை" வரும் ஜூன் 11ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்குபெறும் இந்த தொடரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறது. இதில் பங்கு பெரும் முன்னணி அணிகளை பற்றி இப்போது பார்போம்.

ஸ்பெயின்:

     நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் முதல் இடத்தில் உள்ளது. இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இருந்தாலும் எதிர் அணிகளை நடுங்கவைக்கும் அணியாக திகழ்கிறது. பெர்னாண்டோ டோரஸ் மற்றும் டேவிட் வில்லாவின் கூட்டணி எதிர் அணிகளுக்கு எப்போதும் கிலியை கொடுக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. மிட்பீல்டில் ஜாவி, இனியெஸ்டா, பாப்ரேகாஸ், அலோன்சோ போன்ற சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. தடுப்பாட்டதிலும் சிறந்து விளங்கும் வீரர்களை உள்ளடக்கியது இன்னும் ஒரு சிறப்பாகும். கோல் கீப்பர் விசயத்தில் ஸ்பெயினிற்கு கவலையே இல்லை. உலகின் நம்பர் 1 கீப்பராக கருதப்படும் இகேர் காசில்லஸ், விக்டர் வல்டேஸ் மற்றும் பெபெ ரெய்னா ஆகிய மூன்று மிக சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.


     முக்கியமான தொடர்களில் பிற்பாதியில் சொதப்புவதை வாடிக்கையாகக்கொண்ட ஸ்பெயின் 2008 யுரோ போட்டியை வென்றதின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. குறை என்று பெரிதாக எதுவும் இல்லாதது ஸ்பெயினின் மிகபெரிய பலமாகும். அணியின் பெரும்பாலான வீரர்கள் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணியை சேர்தவர்களாகவே இருப்பதால் டீம் கெமிஸ்ட்ரி சிறப்பானதாக உள்ளது.

பிரேசில்:
    கால்பந்து என்றவுடன் பெரும்பாலானோர்க்கு நினைவிற்கு வரும் நாடு பிரேசில். ஐந்து முறை உலககோப்பை வென்ற நாடு! பிபா தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடு. முன்னாள் கேப்டன் கார்லோஸ் துங்கா பொறுப்பு ஏற்றதில் இருந்து தட்டு தடுமாறி விளையாடி கொண்டு இருந்த பிரேசில் கான்பெடரேஷன் கோப்பை வென்றதில் இருந்து நன்றாக விளையாடி வருகிறது. ரொனால்டோ, ரோனல்டின்ஹோ, அட்ரியானோ மற்றும் அலெக்ஸ்சாண்ரோ பேட்டோ ஆகியோருக்கு இந்த உலக கோப்பையில் துங்கா கல்தா கொடுத்துவிட்டார். இருந்தபோதிலும் காகா, பாபியானோ, ரோபின்ஹோ போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பது பெரும் பலம். ரியல் மட்ரிட் அணியில் விளையாடி வரும் காகாவின் ஆட்டம் சமிபத்தில் சற்று தொய்வு அடைந்து இருந்தாலும், இந்த உலக கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இன்டெர் மிலான் அணிக்கு விளையாடி வரும் மைகான் மற்றும் லுசியோ ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்குகிறார்கள். பிரேசில் ஆறாவது முறையாக உலக கோப்பை வெல்ல சிறப்பான வாய்ப்பு இருக்கின்றது.


இங்கிலாந்து:

   பாபியோ காபெல்லோ பயிற்சியாளர் ஆனதில் இருந்து மிக சிறந்த பார்மில் உள்ளது இங்கிலாந்து. ஈரோ 2008 தகுதி பெறாத அணியை இரண்டு வருடங்களில் பலம் பொருந்திய அணியாக மாற்றியது காபெல்லோவின் திறமையே ஆகும்.நடத்தை காரணமாக ஜான் டெர்ரியை அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கிய காபெல்லோ, ரியோ பெர்டினண்டை தலைவராக நியமித்தார். அவரும் இப்போது காயம் காரணமாக விலகி உள்ளதால் லிவெர்பூல் அணியின் தலைவர் ஸ்டீவன் ஜெராட் புதிய தலைவராக உள்ளார். நட்சத்திர வீரர் ரூனி மிக சிறந்த பார்மில் உள்ளார். ஜெராட் மற்றும் லாம்பர்ட்க்கு இது அனேகமாக கடைசி உலக கோபையாக இருக்குமாதலால் சிறப்பான முறையில் முடிக்க விரும்புவார்கள். 

  அர்ஜென்டினா:

            டியகோ மரடோனாவின் அர்ஜென்டினா அணி தடுமாறித்தான் உலக கோப்பைக்கு தகுதி பெற முடிந்தது. உலகின் தலை சிறந்த வீரர் லியோனல் மெஸ்ஸி கிளப் அளவில் சாதிப்பதை போல் அர்ஜென்டினா அணியில் எதுவும்சாதிக்கவில்லை. ஆனால் உலக கோப்பையில் நன்றாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கலாம். அர்ஜென்டினா அணியில் திறமைக்கு குறைச்சலே இல்லை. மெஸ்ஸி, அகுரோ, டெவேஸ், மிலிட்டோ, ஹுகையன், மச்செரனோ போன்ற சிறந்த வீரர்களை கொண்டாலும் அணியாக விளையாடும் பொழுது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.வால்ட்டர் சாமுவேல் , கப்ரியல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் அனுபவம் தடுபாட்டதில் கை கொடுக்கும். எப்போதும் போல தாக்குதல் ஆட்டத்திர்க்கு ஏற்றார் போல் அணியின் பார்மேசனை மரடோனா அமைப்பார். கோப்பையை வெல்லுமோ இல்லையோ அர்ஜெண்டினாவின் ஆட்டம் பார்பதற்கு அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

நெதர்லாந்து:

உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 100% வெற்றியுடன் தகுதி பெற்ற நாடு நெதர்லாந்து.  ஸ்பெயினை போலவே அதிரடி ஆட்டத்தில் சிறந்த அணி நெதர்லாந்து. முன்னணி வீரர் ரோபனின் காயம் அவரின் பங்கேற்பை கேள்விகுறியாகவே வைத்துள்ளது. டச்சு அணி முதல் சுற்றில் எளிதாக முன்னேறும் வாய்ப்பை கொண்டுள்ளது. சென்ற உலக கோப்பையிலும் ஈரோ 2008 லும் முதல் சுற்றில் அற்புதமாக விளையாடிவிட்டு இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த முறை நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகின்றது.
இத்தாலி:

நடப்பு சாம்பியன் இத்தாலி இம்முறை நன்றாக விளையாடுவது சந்தேகம்தான். நட்சத்திர கோல் கீப்பர் புபோன் மட்டுமே நம்பிக்கையை தருகிறார். பிர்லோ, கட்டுசோ,கன்னவோரோ போன்ற வீரர்கள் வயதாகி விட்டதால் நன்றாக விளையாடுவார்கள் என்று சொல்ல முடியாது. தாக்குதல் ஆட்டத்தில் கிலர்டினோ மட்டுமே நம்பிக்கை தருகிறார். சென்ற முறை போல இந்த முறை இத்தாலி அணி ஆச்சரியத்தை கொடுக்க வாய்ப்புக்கள் இல்லை என்றே தோன்றுகிறது.ஜெர்மனி:

முன்று முறை சாம்பியன் ஆன ஜெர்மன் அணி நல்ல பார்மில் உள்ளது. காயம் காரணமாக மைக்கல் பல்லக் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பாகும். உலக கோப்பை தொடர்களில் எப்பொழுதுமே கடைசி சுற்றுகள் வரை செல்லக்கூடிய அணியாக திகழ்வது ஜெர்மனியின் சிறப்பாகும். உலக கோப்பை தகுதி சுற்றில் எளிதாக வென்ற ஜெர்மனி உலக கோப்பையிலும் நன்றாக விளையாடும் என்று எதிர்பர்கபடுகிறது.
பிரான்ஸ்:

நிச்சயமாக வெற்றி பெறாது என்று உறுதியாக கூறலாம். காரணம் பயிற்சியாளர் ரைமன் டோமன்செக். இவர் இன்னும் எப்படி அணியில் உள்ளார் என்பது அனைவருக்கும் பெரும் விந்தையே. ஈரோ 2008ல் படு தோல்வி கண்ட பிறகும் தொடர்ந்து அணியில் உள்ளார். உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பி அதன் பின்னர் இரண்டாம் வாய்ப்பான ப்ளே ஆப் ல் ஏமாற்றி உலக கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கிறது பிரான்ஸ். அது மட்டும் அல்லாது நட்சத்திர இளம் வீரர் சமீர் நஸ்ரியை தேர்வு செய்யாமல் விட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். சென்ற முறை போல காப்பாற்ற இப்போது அணியில் ஜிடேன் இல்லை. ப்ரான்சின் நிலை கவலைக்குரியது தான்.Wednesday, April 7, 2010

உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவது போர்ப்ஸ் பத்திரிகையின் வழக்கம். இந்த வருடத்திற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை பெற்றிருப்பவர் மெக்ஸிகோ நாட்டின் “கார்லோஸ் ஸ்லிம் ஹெலு” சென்ற வருடம் இவர் முன்றாம் இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ நாட்டின் பொதுத்துறை நிருவனமான டெல்மெக்ஸ் (TELMEX) 1990 ஆம் ஆண்டு தனியார்மயம் ஆக்கபட்டபோது அந்நிறுவனத்தை வாங்கினார். இன்று 53.5 பில்லியன் டாலருக்கு இவருடைய சொத்து மதிப்பு. அவருடைய மற்றுமொரு நிறுவனமான அமெரிக்கா மோவில் (AMERICA MOVIL) லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

முதல் பத்து பணக்காரர்கள்:

1.       கார்லோஸ் ஸ்லிம் ஹெலு .      மெக்ஸிகோ
2.       பில் கேட்ஸ்                      யூ.எஸ்
3.       வாரன் பபட்                      யூ.எஸ்
4.       முகேஷ் அம்பானி                இந்தியா
5.       லக்ஷ்மி மிட்டல்                  இந்தியா
6.       லாரன்ஸ் எல்லிசன்               யூ.எஸ்
7.       பெர்னார்ட் அர்னால்ட்             பிரான்ஸ்
8.       எய்கே பாடிஸ்டா                 பிரேசில்
9.       அமன்சியோ ஒர்டேகா             ஸ்பெயின்
10.   கார்ல் அல்ப்ரேச்ட்                 ஜெர்மனிஆசியாவிலேயே அதிகமான பில்லயனர்கள் உள்ள நாடு சீனா. ஆனால் முதல் 25 பில்லியனர்களில் பத்து பேர் இந்தியர்கள். ரிலையன்ஸ் குழுமங்களின் முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரராக திகழ்கிறார். 

Sunday, April 4, 2010

உங்கள் பாஸ்வோர்ட் மிகவும் பத்திரமாக இருக்கவேண்டுமா?

உங்களது பச்ச்வோர்டை மிக பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? இதோ நல்ல வழிகள்!                                                    ...                                                         ...
                                                              ...


Tuesday, March 30, 2010

மைய அரசின் விபரீத சட்டம்

நடந்து வருகின்ற பாராளுமன்ற கூட்டதொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை மிகுந்த தடபுடலுடன் சமர்பித்த மைய அரசு, அமைதியாக இன்னொரு காரியத்தையும் செய்ய முயன்றது. அது அணு விபத்துக்களின்னால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் குறித்த சட்டம்(Civil Liability for Nuclear Damage Bill). போபால் விபத்து போன்ற ஒரு கோர நிகழ்வும் அதன் பின் நடந்தேறிய அவலங்களை கண்ட பிறகும் காங்கிரஸ் அரசிற்கு இன்னும் புத்தி வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது!


        இந்த சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது? ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் ஒரு அணு உலை இயக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்தில் ஒரு மிக பெரிய கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படுகிறது. அதனால் மிகுந்த உயிர் சேதமும் பாதிப்புக்களும் ஏற்படுகின்றது. இந்த இழப்புக்களை சரிசெய்ய வேண்டிய கடமை அந்நிறுவனத்திற்கு இருக்கின்றது. அனால் இந்த புதிய சட்டத்தின்படி அந்நிறுவனம் 300மில்லியன் டாலர் நஷ்டஈடு கொடுத்தாலே போதும். மீதி பணத்தை இந்திய அரசாங்கமே கொடுக்க வேண்டும், அதாவது வரி கட்டும் நானும் நீங்களும்தான். தப்பு செய்த அமரிக்க நிறுவனம் எந்தவித சட்டசிக்கலும் இல்லாமல் பொட்டிய கட்டிவிடுவார்கள். 
   இந்த இடத்தில் நாம் போபால் விபத்தையும் ஒரு அணு விபத்தையும் ஒரே அளவில் வைத்து ஒப்பிடமுடியாது . செர்நோப்ய்ல் அணுஉலை விபத்து இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். இந்த விபத்தினால் ஏற்பட்ட உடனடி மரணம் 56  மட்டுமே என்றாலும் ஏறக்குறைய அறு லட்சம் பேருக்கு கடுமையான கேன்சரை விளைவித்துள்ளது. இன்றளவும் கதிர்வீச்சின் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன், பெலாருஸ் போன்ற முன்னால் சோவியத் நாடுகளின் பட்ஜெட்டில் பெரும்பகுதி இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்கே செலவிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் 300 மில்லியன் டாலர் என்பது மிக குறைந்த தொகைதான். 
     அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்த கையோடு அமெரிக்க அணு நிறுவனங்களை இழுக்க முயற்சிப்பது நல்லதுதான். அதற்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் பைத்தியக்காரர்கள் ஆக்கும் அரசின் இந்த சட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜா.க. மற்றும் கம்யூனிஸ்ட்கள் கடுமையாக சாடியதால் இப்போதைக்கு இந்த சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
  ப.கு :   அமெரிக்காவில் இதே போன்று சட்டம் உள்ளது. அனால் நஷ்ட ஈட்டு தொகை 10 பில்லியன் டாலர்!

Monday, March 8, 2010

பீ டீ கத்திரிக்காயும் மோன்சன்டொவும்

இந்த வாரம் டெஹெல்கா வார இதழில் பீ டீ கத்திரிக்காயை வைத்து இந்தியாவில் ஒரு மிக பெரிய  கொள்ளையில் ஈடுபட தயாராய் இருக்கும் அமெரிக்க நிறுவனம் "மோன்சன்டொ" வை பற்றி கட்டுரை வெளியாகி உள்ளது. சரியான விதத்தில் எந்த சோதனையும் செய்யாமல் பீ டீ கத்திரிக்காயை சந்தையில் வெளவிடுவதற்கு முனைப்பு காட்டும் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் செயல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.கபில் சிபல் மற்றும் சிவராஜ் சௌகான் ஆயோரின் பீ டீ கத்திரிக்காய் மோகமும்   ஏரிச்சலை உண்டாக்குகின்ற்து. சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷின் முட்டுக்கட்டையால் தற்போதைக்கு இதன் வெளயீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


          இக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

Friday, September 4, 2009

வித்தியாசமான கட்டிடங்கள்

சில வித்தியாசமான கட்டிடங்கள்