Tuesday, March 30, 2010

மைய அரசின் விபரீத சட்டம்

நடந்து வருகின்ற பாராளுமன்ற கூட்டதொடரில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை மிகுந்த தடபுடலுடன் சமர்பித்த மைய அரசு, அமைதியாக இன்னொரு காரியத்தையும் செய்ய முயன்றது. அது அணு விபத்துக்களின்னால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் குறித்த சட்டம்(Civil Liability for Nuclear Damage Bill). போபால் விபத்து போன்ற ஒரு கோர நிகழ்வும் அதன் பின் நடந்தேறிய அவலங்களை கண்ட பிறகும் காங்கிரஸ் அரசிற்கு இன்னும் புத்தி வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது!


        இந்த சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது? ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் ஒரு அணு உலை இயக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்தில் ஒரு மிக பெரிய கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படுகிறது. அதனால் மிகுந்த உயிர் சேதமும் பாதிப்புக்களும் ஏற்படுகின்றது. இந்த இழப்புக்களை சரிசெய்ய வேண்டிய கடமை அந்நிறுவனத்திற்கு இருக்கின்றது. அனால் இந்த புதிய சட்டத்தின்படி அந்நிறுவனம் 300மில்லியன் டாலர் நஷ்டஈடு கொடுத்தாலே போதும். மீதி பணத்தை இந்திய அரசாங்கமே கொடுக்க வேண்டும், அதாவது வரி கட்டும் நானும் நீங்களும்தான். தப்பு செய்த அமரிக்க நிறுவனம் எந்தவித சட்டசிக்கலும் இல்லாமல் பொட்டிய கட்டிவிடுவார்கள். 
   இந்த இடத்தில் நாம் போபால் விபத்தையும் ஒரு அணு விபத்தையும் ஒரே அளவில் வைத்து ஒப்பிடமுடியாது . செர்நோப்ய்ல் அணுஉலை விபத்து இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். இந்த விபத்தினால் ஏற்பட்ட உடனடி மரணம் 56  மட்டுமே என்றாலும் ஏறக்குறைய அறு லட்சம் பேருக்கு கடுமையான கேன்சரை விளைவித்துள்ளது. இன்றளவும் கதிர்வீச்சின் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன், பெலாருஸ் போன்ற முன்னால் சோவியத் நாடுகளின் பட்ஜெட்டில் பெரும்பகுதி இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்கே செலவிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் 300 மில்லியன் டாலர் என்பது மிக குறைந்த தொகைதான். 
     அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்த கையோடு அமெரிக்க அணு நிறுவனங்களை இழுக்க முயற்சிப்பது நல்லதுதான். அதற்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் பைத்தியக்காரர்கள் ஆக்கும் அரசின் இந்த சட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜா.க. மற்றும் கம்யூனிஸ்ட்கள் கடுமையாக சாடியதால் இப்போதைக்கு இந்த சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
  ப.கு :   அமெரிக்காவில் இதே போன்று சட்டம் உள்ளது. அனால் நஷ்ட ஈட்டு தொகை 10 பில்லியன் டாலர்!

Monday, March 8, 2010

பீ டீ கத்திரிக்காயும் மோன்சன்டொவும்

இந்த வாரம் டெஹெல்கா வார இதழில் பீ டீ கத்திரிக்காயை வைத்து இந்தியாவில் ஒரு மிக பெரிய  கொள்ளையில் ஈடுபட தயாராய் இருக்கும் அமெரிக்க நிறுவனம் "மோன்சன்டொ" வை பற்றி கட்டுரை வெளியாகி உள்ளது. சரியான விதத்தில் எந்த சோதனையும் செய்யாமல் பீ டீ கத்திரிக்காயை சந்தையில் வெளவிடுவதற்கு முனைப்பு காட்டும் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் செயல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.கபில் சிபல் மற்றும் சிவராஜ் சௌகான் ஆயோரின் பீ டீ கத்திரிக்காய் மோகமும்   ஏரிச்சலை உண்டாக்குகின்ற்து. சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷின் முட்டுக்கட்டையால் தற்போதைக்கு இதன் வெளயீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


          இக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.